‘அயோத்தி’ படத்தால் எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்திருக்கிறது – சசிகுமார் | ‘Ayoddhi’ has done something good for me without me even knowing it

‘அயோத்தி’ படத்தால் எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நடந்திருக்கிறது – சசிகுமார் | ‘Ayoddhi’ has done something good for me without me even knowing it


சென்னை,

நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘அயோத்தி’. இந்த படத்தினை இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வசிக்கும் குடும்பத்தினர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வருவார்கள். அப்போது விபத்து நடந்து அதில் ஒருவர் உயிரிழந்து விடுவார். நடிகர் சசிகுமார் உயிரிழந்தவரின் உடலை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவி செய்வார். இதுதான் இப்படத்தின் கதைக்களமாகும்.

இந்த நிலையில், நடிகர் சசிகுமார், ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சசிகுமார், “அயோத்தி படத்தால், விமானத்தில் உடலை கொண்டு செல்வதற்கு தேவையான நடைமுறைகள் எளிமையாக மாறியுள்ளது. அதற்காக, ரூ. 1 லட்சம் வரை மானியமும் கொடுக்கிறார்கள், இதனால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக என்னிடம் ஒருவர் கூறினார். எனக்கே தெரியாமல் ஒரு நல்லது நிகழ்ந்திருக்கிறது” என்று அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *