’அம்மா அனுப்பிய புகைப்படத்தால்தான் நான் நடிகை ஆனேன்’ – மாளவிகா மனோஜ்|’I became an actress because of a photo my mother sent me’

’அம்மா அனுப்பிய புகைப்படத்தால்தான் நான் நடிகை ஆனேன்’ – மாளவிகா மனோஜ்|’I became an actress because of a photo my mother sent me’


சென்னை,

நடிகை மாளவிகா மனோஜ் 2023-ல் வெளியான ‘ஜோ’ படத்தின் மூலம் பிரபலமானார். சமீபத்தில், அவர் ‘ஓ பாமா அய்யோ ராமா’ மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், ரியோ ராஜ் உடன் ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்தில் நடித்துள்ளார். இது வருகிற 31 அன்று வெளியாக உள்ளது

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய மாளவிகா, தனது அம்மா அனுப்பிய புகைப்படத்தால்தான் நடிகை ஆனதாக கூறினார்.

அவர் கூறுகையில், ‘என்னுடைய முதல் படமான பிரகாஷ் பரக்கத்தே வாழ்க்கையையே மாற்றிவிட்டது. நான் 10ம் வகுப்பு படிக்கும்போது என் அம்மா அப்படத்தின் ஆடிஷனுக்கு என்னுடைய போட்டோவை அனுப்பி இருக்கிறார். அதில் நான் தேர்வாகும் வரை எனக்கு அது பற்றித் தெரியாது’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *