’அம்மாவை அவமானப்படுத்தினர்…காரில் கூட ஏற விடவில்லை…- மிருணாள் தாகூர் |’They didn’t let me get in the car…they insulted my mother’

சென்னை,
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் இவரும் ஒருவர்.
பாலிவுட் திரையுலகில் நடித்து வந்த மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம் நல்ல பிரபலத்தை தென்னிந்திய சினிமாவில் ஏற்படுத்தி கொடுத்தது. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மிருணாள் தாகூர், எமோஷனலான ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘நான் மிகவும் வறுமையில் பிறந்தேன். என் அம்மா என்னை வளர்க்கவும் குடும்பத்தை நடத்தவும் மிகவும் கடினமாக உழைத்தார். பல நிதி சிக்கல்கள் இருந்தன. அவற்றையெல்லாம் மீறி என் அம்மா எங்களை வளர்த்தார்.
எங்கள் உறவினர்கள் கூட எங்களை இழிவாகப் பார்த்தார்கள். அவர்கள் எங்களை அவமானப்படுத்தினர். என் அம்மாவை காரில் கூட ஏற விடவில்லை. அப்போதுதான் சொந்தமாக கார் வாங்கணும் என்று, முடிவெடுத்தேன்.
அந்தக் கனவு இப்போது நனவாகியுள்ளது. என் அம்மாவை அவமதித்தவர்கள் யாரும் வாங்காத ஒரு பென்ஸ் காரை நான் என் அம்மாவுக்கு வாங்கினேன்’ என்றார். சமீபத்தில், மிருணாள் தாகூர் ஒரு விலையுயர்ந்த காரை வாங்கினார்.
நடிகை மிருணாள் தற்போது அதிவி சேஷுடன் ’டெகாய்ட்’ படத்தில் நடித்து வருகிறார். கிரைம் திரில்லர் படமான இது அடுத்தாண்டு வெளியாகிறது..






