''அமீர் கானின் ''3 இடியட்ஸ்'' படத்தை நிராகரித்த பிரபலம் – பகிர்ந்த நடிகை

சென்னை,
அமீர் கான், ஆர். மாதவன் மற்றும் ஷர்மன் ஜோஷியின் ”3 இடியட்ஸ்” படத்தை நிராகரித்தது குறித்து கஜோல் மனம் திறந்து பேசினார்.
விஷால் புரியா இயக்கி இருக்கும் ”மா” என்ற புராண திகில் படத்தில் கஜோல் நடித்து உள்ளார். இந்த படம் வருகிற 27-ம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் கஜோல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்போது பல பெரிய பட வாய்ப்புகளை யோசிக்காமல் நிராகரித்ததாக கஜோல் கூறினார். அவர் நிராகரித்த படங்களில் ஒன்று 3 இடியட்ஸ்.
அவர் கூறுகையில், “நிறைய ஹிட் படங்களை நிராகரித்திருக்கிறேன். அதில் முக்கியமான ஒன்று 3 இடியட்ஸ். எனக்குப் பிடிக்காத எதையும் வேண்டாம் என்று சொல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன். பின்னர் அதை நினைத்து கவலைப்படவும் மாட்டேன். அவை இல்லாமலேயே நான் எனக்காக சிறந்ததை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றார்
அமீர் கான், ஆர். மாதவன், ஷர்மான் ஜோஷி மற்றும் கரீனா கபூர் நடித்த 3 இடியட்ஸ், பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து, இந்தியாவில் ரூ. 300 கோடியைத் தாண்டிய முதல் இந்தியப் படமாக மாறியது.