அமீர்கானின் "சித்தாரே ஜமீன் பர்" படத்தை பாராட்டிய சச்சின்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர்கான். இவர் தற்போது ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில், அவருடன் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அமீர்கானின் “சித்தாரே ஜமீன் பர்” படம் இன்று வெளியானது, அமீர் கானின் கடைசி இரண்டு படங்களான ‘லால் சிங் சத்தா’ மற்றும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ ஆகியவை பெரும் ஏமாற்றங்களை அளித்தன. இதனால் அனைவரின் கண்களும் ‘சீத்தாரே ஜமீன் பர்’ மீது உள்ளது. இப்படம் அமீர்கானின் கம்பேக் படமாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தை முன்கூட்டிய சிறப்புக் காட்சிகளுடன் பார்த்ததாக அமீர்கான் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
குடும்பத்துடன் இப்படத்தைப் பார்த்த சச்சின், “மனிதர்களின் குறைபாடுகளை புரிந்துகொள்ளும் அழகான படம். மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்ட பல செய்திகள் இப்படத்தில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று கூறியதாக அமீர்கான் கூறியுள்ளார்.