அமிதாப்பச்சன் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்த தீபிகா படுகோனே

மும்பை,
பிரபல ஹாலிவுட் படமான ‘தி இன்டர்ன்’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே நடிப்பதாக இருந்தது. கடந்த 2015-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் 2020-ம் ஆண்டு தொடங்கியது. இந்த படத்தில் ரிஷிகபூர், தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், ரிஷிகபூர் மரணமடைந்ததால் அவருக்கு பதில் அமிதாப்பச்சன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில் தீபிகா படுகோனே படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தீபிகா படத்தில் நடிப்பதில் இருந்து மட்டும் விலகி தயாரிப்பாளராக பணியாற்றுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து புதிய கதாநாயகி தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.