அனுபாமாவின் பிறந்தநாளில் ஸ்பெஷல் புரோமோ வெளியிட்ட ‘பரதா’ படக்குழு

சென்னை,
‘பிரேமம்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது இவர் ‘பரதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இன்று நடிகை அனுபாமா தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தசூழலில், அனுபாமா நடிக்கும் ‘பரதா’ படக்குழு ஸ்பெஷல் புரோமோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ள ‘பரதா’ படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது