அனுபமா ரசிகர்களுக்கு விருந்து…தொடர்ச்சியாக திரைக்கு வரும் 3 படங்கள்|Anupama Parameswaran to Deliver a Triple Treat Within a Month

சென்னை,
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தொடர்ச்சியாக பல படங்களுடன் தனது ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி இருக்கிறார். ஒரு மாதத்திற்குள் அனுபமாவின் 3 படங்கள் ஓடிடியிலும் திரையரங்குகளிலும் வெளியாகின்றன.
அவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஜானகி வி vs ஸ்டேட் ஆப் கேரளா படம் வருகிற 15-ம் தேதி முதல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
அடுத்ததாக சினிமா பண்டி படத்திற்காக அறியப்பட்ட பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கிய ”பரதா” படம். இப்படம்வருகிற 22-ம் தேதி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாகிறது. இதில் அனுபமாவுடன் சங்கீதா மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த இரண்டு படங்களைத் தவிர, பட்டியலில் ”கிஷ்கிந்தாபுரி”யும் உள்ளது. பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திகில் படத்தில் அனுபமா கதாநாயகியாக நடிக்கிறார். இதை கவுஷிக் பெகல்லபதி இயக்கியுள்ளார். இந்த படத்தை செப்டம்பர் 12 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெவ்வேறு வகையான இந்த மூன்று படங்களும் ஒரு மாத காலத்திற்குள் வெளியாக இருப்பது, அனுபமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.