அனுபமாவின் “லாக்டவுன்” படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்

அனுபமாவின் “லாக்டவுன்” படத்திற்கு 'யு/ஏ' தணிக்கை சான்றிதழ்


லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படம் வருகிற 5ம் தேதி திரைக்கு வருகிறது.

இதற்கிடையில், ‘லாக் டவுன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சினை அதன்பிறகு கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என சுழலும் கதையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த டிரெய்லர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் இன்னும் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தணிக்கை வாரியம் லாக்டவுன் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *