“அனிருத்துக்கு எளிது.. ஆனால் எனக்கு இல்லை!”- இசையமைப்பாளர் தமன் வேதனை | “It’s easy for Anirudh, but not for me!”

தமிழ் மற்றும் தெலுங்கில் நட்சத்திர இசையமைப்பாளராக இருப்பவர் தமன். இவர் தமிழில் ‘வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது, அகண்டா 2, தி ராஜா சாப் போன்ற தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் தமன், சமீபத்திய பேட்டியில் தமிழ் – தெலுங்கு சினிமா குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். “தெலுங்கில் அனிருத்துக்கு எளிதாக பட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் எனக்கு தமிழில் பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழ் சினிமாவில் இருக்கும் வலுவான ஒற்றுமை, தெலுங்கு சினிமாவில் இல்லை. பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பாதிக்கின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கு படங்களில் வேலை செய்வது விருப்பத்தால் அல்ல பணத்திற்காகதான்” என்று தமன் கூறியுள்ளார்.






