’அந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை’ – நடிகை அக்சரா

சென்னை,
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் ஷோ மூலம் பிரபலமானவர் அக்சரா ரெட்டி. சமீபத்தில் வெளியான ‘ரைட்’ படத்தின் மூலம் இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த நிலையில், அவர் சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘கமலுடன் நடிக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. பிக் பாஸ் ஷோவில் அவரோடு பேச வாய்ப்பு கிடைச்சது. அங்கு அவர் எல்லாருக்கும் ஒரு விஷயம் சொன்னார்.
உங்கள் வாழ்க்கைக்கான ஸ்கிரிப்டை நீங்கதான் எழுதுறீங்க. நாளைக்கு உங்க வாழ்க்கையில் என்ன நடக்கணும்னு நீங்கதான் முடிவு செய்யணும். அவர் சொன்னது என் மனதில் பதிந்து போனது. என் வாழ்க்கையை நானே முடிவு பண்றேன்’ என்றார்.