அந்த விஷயத்தில் என் மகள் கவனமாக இருப்பாள்” – வனிதா விஜயகுமார் | “My daughter will be careful in that matter

அந்த விஷயத்தில் என் மகள் கவனமாக இருப்பாள்” – வனிதா விஜயகுமார் | “My daughter will be careful in that matter


சென்னை,

சினிமாவில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர், வனிதா விஜயகுமார். இவர் சில படங்களில் நடித்த வேகத்தில் காணாமல் போனார். பல வருடங்களுக்கு பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். இவர் தற்போது தன்னுடைய மகள் ஜோவிகா தயாரிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகிற ஜூலை 4-ந் தேதி வெளியாக இருக்கிறது.

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவும் சினிமாவில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமார், ”என் மகள் எப்போதும் எனக்கு அட்வைஸ் செய்து கொண்டே இருப்பாள். என் மகள் காதலிப்பாளா என்பதில் என் கருத்து சரியாக இருக்காது. ஆனால் என்னுடைய வாழ்க்கையின் மூலமாக காதல், அதனால் ஏற்படும் வலிகளை பற்றி அவள் கற்றுக் கொண்டிருக்கிறாள். எனவே அவள் காதல் செய்ய மாட்டாள் என்றே நான் கருதுகிறேன். அந்த விஷயத்தில் என் மகள் கவனமாக இருப்பாள் என்று எனக்கு தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *