’அந்த மொழியில் எனது திறமையை நிரூபிக்க ஆவலாக உள்ளேன்’ – ருக்மிணி வசந்த்

சென்னை,
காந்தாரா 2′ படத்தில் தனது சக்திவாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த், இப்போது முழு பார்மில் இருக்கிறார். தற்போது அவருக்கு பல மொழிகளில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. விரைவில் பாலிவுட் பார்வையாளர்களை கவர அவர் தயாராக உள்ளார்.
சமீபத்திய பேட்டியில் ருக்மணி, இதை பற்றி வெளிப்படையாகப் பேசினார். அவர் பேசுகையில், ‘பாலிவுட் படங்களில் எனக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. இந்தி எனக்கு சிறு வயதிலிருந்தே பரிச்சயமான மொழி. எனது குடும்பம் ராணுவ பின்னணியைக் கொண்டிருப்பதால், வெவ்வேறு கண்டோன்மென்ட்களுக்கு இடையில் இணைக்கும் மொழியாக இந்தி இருந்தது.
அதனால்தான் அந்த மொழியின் மீது எனக்கு ஒரு சிறப்புப் பற்று உள்ளது. இதுவரை, எனக்கு இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அந்த மொழியில் எனது திறமையை நிரூபிக்க நான் மிகவும் ஆவலாக உள்ளேன். கடவுளின் அருளால் அந்தப் பயணம் விரைவில் தொடங்கும் என்று நம்புகிறேன்” என்றார்.






