'அந்த படத்தால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்'…அனுபமா பரமேஸ்வரன்

சென்னை,
விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக நடித்த பைசன் படம் அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் அனுபமா கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழைத்தொடர்ந்து, தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது.
இந்த சூழலில், பைசன் படத்தின் தெலுங்கு புரமோஷனின்போது , தனது பரதா படம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் அனுபமா பகிர்ந்து கொண்டார்.
தெலுங்கில் தான் நடித்த பரதா படத்தின் வசூல் ரிசல்ட் தன்னை மிகவும் ஏமாற்றமடையச் செய்ததாக அவர் கூறினார். இதுபோன்ற ஒரு ரிசல்ட்டை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பரதா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அவர் கூறினார்.
இருந்தாலும், இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று அவர் கூறினார். ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியடைந்தது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான பரதா, ரூ.4 கோடி மட்டுமே வசூலித்தது.






