’அந்த நேரத்தில் உதவி கேட்பது தவறில்லை’ – சாரா அலிகான்

சென்னை,
மன அழுத்தத்தில் இருக்கும்போது உதவி கேட்பதில் தவறில்லை என்றும், அதை பலவீனமாகக் கருதத் தேவையில்லை என்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் கூறினார்.
சாரா அலி கான், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெறுவது பலவீனத்தைக் குறிக்காது, மாறாக வளர்ச்சிக்கு உதவுகிறது என்று கூறினார். மேலும் மனதைக் கவனித்துக்கொள்வது உடலைப் பராமரிப்பது போலவே முக்கியமானது என்பதை புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.
கேதார்நாத் திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய சாரா அலி கான், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பாலிவுட் நடிகர் சைப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோரின் மகள் சாரா அலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.