அந்த நட்சத்திர ஹீரோ படத்தைப் பாராட்டிய நடிகை சோபிதா |Sobhita Dhulipala praised the film starring the star hero

அந்த நட்சத்திர ஹீரோ படத்தைப் பாராட்டிய நடிகை சோபிதா |Sobhita Dhulipala praised the film starring the star hero


சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு இருவருமே தற்போது பிசியாக சினிமாவில் நடித்து கொண்டிருக்கின்றனர்.

சினிமா படப்பிடிப்பு போக, சமூக வலைதளங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை சோபிதா துலிபாலா வழக்கமாக கொண்டிருக்கிறார். அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

சமூக ஊடகங்களில் தீவிரமாக இருக்கும் சோபிதா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் ஒரு சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டார். கடந்த சில நாட்களாக இந்திய பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்து வரும் துரந்தர் படத்தைப் பாராட்டினார். ‘வாவ்.. வாவ்.. வாவ்.. என்று பதிவிட்டார்.

தற்போது, சோபிதாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், துரந்தர் திரைப்படம் ஏற்கனவே ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *