''அது மட்டும் போதும்'' – விஜயகாந்தின் மகன் கண்ணீர் மல்க பேச்சு

சென்னை,
பட விழாவில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
”கேப்டன் பிரபாகரன்” படம் வரும் 22-ல் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் படத்தின் இசை, டிரெய்லர் மறு வெளியீட்டு விழாவில், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கண்ணீர் மல்க பேசினார்.
அவர் கூறுகையில், “எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை. கேப்டன் மகன் விஜய பிரபாகரன், எனக்கு வேற பெருமை ஏதும் வேண்டாம், கடைசி வரை விஜயகாந்த் மகன் என்கிற பெருமை மட்டும் போதும்” என்றார்.
ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இது விஜயகாந்தின் 100-வது படமாகும். இப்படத்தின் மூலம் விஜய்காந்திற்கு ‘கேப்டன்’ என்ற அடைமொழி கிடைத்தது. இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலி கான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர்.
இந்தப்படம் மூலம் தங்களது திரையுலக பயணத்தில் திருப்புமுனை பெற்றவர்கள் பலர். இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாசமுள்ள பாண்டியரே என்கிற பாடலும் ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலும் இன்றைக்கும் ஒவ்வொரு ஊரிலும் திருவிழாக்களிலும் விசேஷ வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் கொண்டாட்ட பாடல்களாக அமைந்து விட்டன.