’அது நான்தான், ஆனால்’…கருப்பு பட அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி|’That’s me, but’…R.J. Balaji gives a Karuppu film update

சென்னை,
சூர்யாவின் கருப்பு படத்தில் தானும் நடித்திருப்பதாக அப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் கருப்பு படத்தின் எடிட் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக கூறினார்.
அவர் கூறுகையில், ’நான் ஒரு வேலை செய்யும்போது வெளியவே வரமாட்டேன், அதிகமாக பேச மாட்டேன். தற்போது நான் செய்துகொண்டிருந்த வேலை கிட்டதட்ட முடிவுக்கு வந்துவிட்டது. கருப்பு படத்தின் எடிட் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்தது. நான் படத்தை பார்த்துவிட்டேன்.
எனக்கு படத்தை ரொம்ப பிடித்திருந்தது. எங்க தயாரிப்பாளர்கள் புளூ சட்டை மாறனை விட அதிகமாக படத்தை கவனிப்பார்கள். அவர்களே படத்தை பார்த்து நிம்மதியாக இருப்பதாக கூறினர். இப்போதெல்லாம் அதிக பில்டப் கொடுத்தால் யாருக்கும் பிடிப்பதில்லை. அதனால் நான் அதிகம் பேசப்போவதில்லை’ என்றார்.