’அதனால்தான் சிரஞ்சீவி படத்தில் நடிக்கவில்லை’….பிரபல நடிகை பரபரப்பு கருத்து |actres aamani opens up why she is not acted with megastar chiranjeevi

’அதனால்தான் சிரஞ்சீவி படத்தில் நடிக்கவில்லை’….பிரபல நடிகை பரபரப்பு கருத்து |actres aamani opens up why she is not acted with megastar chiranjeevi


சென்னை,

நடிகர் சிரஞ்சீவி தற்போது தொடர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஸ்வம்பரா மற்றும் மன சங்கரவர பிரசாத் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்தில் நேர்காணலில் நடிகை ஒருவர், சிரஞ்சீவியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தது தனது வாழ்க்கையில் பெரிய இழப்பு என்று கூறினார். அவர் வேறு யாருமல்ல, மூத்த நடிகை ஆமணி தான்.

பிரபல தெலுங்கு நடிகை ஆமணி (வயது 52). பெங்களூருவில் பிறந்த இவர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த நாகர்ஜுனா, பால கிருஷ்ணா, ஜெகபதி பாபு உள்பட பலருடன் நடித்துள்ளார். கமல்ஹாசனுடனும் நடித்துள்ளார். தமிழில் தங்கமான தங்கச்சி, ஆனஸ்ட் ராஜ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், ஒரு நேர்காணலில் ஆமணி , சிரஞ்சீவியுடன் நடிக்க முடியாதது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பு என்று கூறினார். சிறுவயதிலிருந்தே சிரஞ்சீவியின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவருடன் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் கூறினார். அந்த வலி வாழ்நாள் முழுவதும் தன்னுடன் இருக்கும் என்றும் அவர் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *