'அதனால்தான் இவ்வளவு காலம் சினிமாவில் தாக்குப்பிடித்தேன்' – ஷில்பா ஷெட்டி

மும்பை,
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி, கடைசியாக 2023-ம் ஆண்டு தியேட்டரில் வெளியான ‘சுகி’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஓ.டி.டி.யில் வெளியான ‘போலீஸ் போர்ஸ்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘கேடி – தி டெவில்’ எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ரசிகர்களின் ரசனை மாறிவிட்டதென்று நடிகை ஷில்பா ஷெட்டி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
‘சினிமாவில் கடினமான காலகட்டத்தில் இருக்கிறோம். பார்வையாளர்களின் கவனத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. நல்ல கதைகளைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர்களின் ரசனை மாறிவிட்டது.
தற்போது படங்களை பார்க்க பல விதமான முறைகள் இருக்கின்றன. பல ஓடிடிகள் இருப்பது ஒரு வகையில் வரமும் சாபமும் ஆக இருக்கிறது. இருமுனைக் கத்திபோல. படங்களில் நடிக்காதபோதும் எனக்கு ஓடிடி ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். சில நேரங்களில் படங்கள் தோற்றாலும் பாடல் ஹிட்டாகும். அதனால்தான் இவ்வளவு காலம்� சினிமாவில் தாக்குப்பிடித்தேன் என நினைக்கிறேன்’ என்றார்.