அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்


திருவண்ணாமலை ,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இன்று காலை இசைஞானி இளையராஜா வருகை தந்தார் இதையடுத்து சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், மூலவர், உண்ணாமலை அம்மன், நவகிரகம் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவிற்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *