அட்லீக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் புகழாரம்

மும்பை,
அட்லீ இயக்கிய விளம்பர படம் ஒன்றின் வெளியீட்டு நிகழ்வில் பேசிய ரன்வீர் சிங் , அட்லீயை வெகுவாக பாராட்டினார்.
அவர் கூறுகையில், ’அட்லீயின் தற்போதைய படத்தின் (AA22xA6)படப்பிடிப்பு தளத்தில் அவரைப் சந்தித்தேன். என் மனைவி ( தீபிகா படுகோன்) அப்படப்பிடிப்பில் இருக்கிறார். என்னை நம்புங்கள், அவர் இந்திய சினிமாவில் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்றை உருவாக்கி வருகிறார். அவருக்கு என்னுடைய பெரிய பாராட்டுகள்’ என்றார்.
சீன உணவுப்பொருள் நிறுவனமான சிங் நிறுவன விளம்பர படம் ஒன்றை அட்லீ இயக்கியுள்ளார். இந்த விளம்பரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீலா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.