அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய ‘கேஜிஎப்’ பட நடிகர்…ரசிகர்கள் கவலை|’KGF’ actor looks unrecognizable…Fans worried

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய ‘கேஜிஎப்’ பட நடிகர்…ரசிகர்கள் கவலை|’KGF’ actor looks unrecognizable…Fans worried


சென்னை,

இரண்டு பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் வந்த ‘கேஜிஎப்’. இத்திரைப்படம் கன்னட திரைப்பட துறையின் அந்தஸ்தை உயர்த்தியது மட்டுமில்லாமல், ஹீரோ யாஷையும் இந்திய அளவில் பிரபலமாக்கியது.

இதற்கிடையில், அதே படத்தில் நடித்த ஒரு நடிகர் இப்போது அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறி இருக்கிறார். கடுமையான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அவதிப்படுகிறார். இப்போது இந்த விஷயம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

‘கே.ஜி.எப்’ படத்தின் முதல் பாகத்தில் சாச்சா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஹரிஷ் ராய். அவருக்கு இப்போது தைராய்டு புற்றுநோய் நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் ஊடகங்கள் மூலம் தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதனையறிந்த நடிகர் துருவா சர்ஜா அவரது சிகிச்சைக்கு ரூ. 11 லட்சம் நன்கொடை அளித்தார்.

சில நாட்களுக்கு முன்பு, கேஜிஎப் படத்தில் ஷெட்டி வேடத்தில் நடித்த தினேஷ் மங்களூர் மூளை பக்கவாதத்தால் இறந்தார். இப்போது, ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவலையடைய வைத்திருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *