அடுத்த படம்…பிரபல இயக்குனருடன் ஷ்ரத்தா கபூர் பேச்சுவார்த்தை|Shraddha Kapoor holding talks with this blockbuster director

அடுத்த படம்…பிரபல இயக்குனருடன் ஷ்ரத்தா கபூர் பேச்சுவார்த்தை|Shraddha Kapoor holding talks with this blockbuster director


சென்னை,

கடந்த ஆண்டு ஷ்ரத்தா கபூர் – ராஜ்குமார் ராவ் நடிப்பில் வெளியான திகில் நகைச்சுவை படமான ‘ஸ்ட்ரீ 2’ பாக்ஸ் ஆபீஸில் பலரை ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும், ‘ஸ்ட்ரீ 2’- க்குப் பிறகு ஷ்ரத்தா எந்த படத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ‘சாவா’ படத்தை இயக்கிய லக்ஸ்மன் உடேகருடன் நடிகை ஷ்ரத்தா கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருவரும் ஒரு படத்தை பற்றி விவாதித்ததாகவும், ஷ்ரத்தா கபூருக்கு அந்த கதை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எல்லாம் சரியாக நடந்தால், ஷ்ரத்தா கபூரின் அடுத்த படத்தை லக்சுமண் உடேகர் இயக்குவார். இந்த படம் ஒரு மராத்தி நாவலை அடிப்படையாகக் கொண்டதாகவும் , இதில் ஷ்ரத்தா மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணாக நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

‘சாவா’ மற்றும் ‘ஸ்ட்ரீ 2’ படங்களை தயாரித்த மேடாக் பிலிம்ஸ், இப்படத்தையும் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதாநாயகனாக முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *