அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? சிவகார்த்திகேயன் சொன்ன பதில்

சென்னை,
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.இப்படம் இன்று ரையரங்குகளில் வெளியானது.
சென்னையில் பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் ரசிகராக சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ‘மதராஸி’ திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளனர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். சிவகார்த்திகேயனிடம் ‘மதராஸி’ படத்திற்கு கிடைத்திருக்கும் ரெஸ்பான்ஸ் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன , “மதராஸி படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ரசிகர்கள் எந்தெந்த இடத்தில் கைதட்டுகின்றனர், எந்தெந்த இடத்தில் ரெஸ்பான்ஸ் அதிகமாக இருக்கு என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள தான் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்க்கின்றோம்.நாம் நினைத்த இடங்களில் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் கிடைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படத்தை நான் இப்போதான் பண்றேன்.அதுவும் முருகதாஸ் சார் இயக்கத்தில் ஒரு ஆக்சன் படத்தில் நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் என்றார் சிவகார்த்திகேயன்” என்றார்.
அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் விஜய்யின் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி காட்சி பற்றி கேள்விகேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், “அந்த காட்சி எனக்கு ரொம்ப ஸ்பெஷல், இந்த படமும் துப்பாக்கி பற்றிய படம் தான்“ என்றார். அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் மட்டும் தான் என்று சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் ‘மதராஸி’ படத்தின் முதல் நாள் காட்சிக்கு இதுவரை ரூ.10 கோடிக்கும் மேல் முன்பதிவு வசூலாகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.