அடுத்தடுத்து தமிழ் படங்கள் – வசீகரிக்கும் கயடு லோஹர்

சென்னை,
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடுலோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், அவரின் பெயர் அந்த அளவிற்கு வெளியில் தெரியவில்லை.
இந்நிலையில், இவர் தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் நடித்தற்கு பிறகு மிகவும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயடு லோஹர் மாறி உள்ளார்.
டிராகன் படத்தையடுத்து மீண்டும் தமிழில் ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கயடு நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் எபபோதும் ஆக்டிவாக இருக்கும் இவர், ரசிகர்களை சொக்க வைக்கும் அளவுக்கு புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.