அஜித் ரசிகர்களுக்கு அசத்தல் அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்|Adhik Ravichandran gives a wonderful update to Ajith fans

சென்னை,
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய படம் ”குட் பேட் அக்லி”. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தையும்(ஏ.கே 64) அவரே இயக்க உள்ளதாக தெரிவித்தார். இதனால் இப்படமும் முந்தைய படம்போல இருக்குமா அல்லது வேறு ஏதேனும் ஆதிக் கொடுப்பாரா என்று படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை ஆதிக் பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறுகையில்,
“குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களுக்கான படமாக இருந்தது. ‘ஏ.கே 64’ அனைத்து தரப்பினரும் விரும்பும் பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆதிக் இந்த அசத்தலான அப்டேட்டை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார்.