அஜித் சாருக்கு போஸ்டர் ஒட்டியவன் நான் – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் | I am the one who put up the poster for Ajith sir

சென்னை,
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படம் இன்று உலகெங்கும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க சென்னை ரோகினி திரையங்கிற்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களின் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, “திரையரங்கில் ரசிகர்களின் கொண்டாட்டத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. எப்போதும் அஜித் சாரின் ரசிகனாக வந்து படத்தை பார்ப்பேன், அதே போல தான் இப்போதும் வந்துள்ளேன்.
அஜித் சாருக்கு போஸ்டர் ஒட்டிய பையன் நான், அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது ஒரு பெரிய பாக்கியம். அதைவிட வேற எந்த சந்தோஷமும் இல்லை எனக்கு. அவரை போல உழைப்பாளி வேற யாரும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.