"அஜித் எனக்கு இன்னொரு அப்பா "- ஆதிக் ரவிச்சந்திரன் உருக்கம்

சென்னை,
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய படம் ”குட் பேட் அக்லி”. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இதனைத்தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தையும்(ஏ.கே 64) அவரே இயக்க உள்ளார். இதனால் இப்படமும் முந்தைய படம்போல இருக்குமா அல்லது வேறு ஏதேனும் ஆதிக் கொடுப்பாரா என்று படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அஜித் குறித்து அவர் கூறிய வார்த்தைகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.அவர் கூறுகையில்,
“நான் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு காரணம் அஜித்தான். ஒருவர் ஜீரோவாக இருக்கும்போது அவரை நம்பலாம். ஆனால் மைனஸில் இருக்கும்போது அது சாத்தியமற்ற ஒன்று. இதனை சாதாரணமாக யாராலும் செய்ய முடியாது. ரவிச்சந்திரன் போல அஜித்தும் எனக்கு ஒரு அப்பா” என்றார்.