அஜித்தின் 64-வது படம்…இயக்குனர், கதாநாயகி குறித்து வெளியான முக்கிய தகவல்| ‘AK64’-Ajith Kumar likely to reunite with ‘Good Bad Ugly’ director Adhik Ravichandran

சென்னை,
”குட் பேட் அக்லி” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அஜித்தின் 64-வது படத்தின் மீது அனைவரது பார்வையும் திரும்பி இருக்கிறது.
முன்னதாக இப்படம் குறித்து பேசிய அஜித், 64-வது படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தை ”குட் பேட் அக்லி” படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளதாகவும் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்த அஜித்தின் 64-வது பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.