'அங்கம்மாள்' திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

சமீபத்தில் நடைப்பெற்ற நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (2025) சிறந்த திரைப்படத்திற்கான விருதை தமிழ் திரைப்படமான ‘அங்கம்மாள்’ படம் வென்றுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சிறந்த படைப்புக்காக மதிப்புமிக்க இந்த விருது படத்தின் இயக்குனருக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படம் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். இது ஒரு கிராமத்தில் ஜாக்கெட் அணியாத தாயின் வழக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத கதைக்களத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அங்கம்மாள் என்ற கதாப்பாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். அவருடன் இணைந்து வடசென்னை, மெய்யழகன், உள்ளிட்ட படங்களில் நடித்த சரண், நாடோடிகள் படத்தில் நடித்த பரணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.