அக்சய் குமார் சொன்ன அட்வைஸ்…பகிர்ந்த நடிகை சவுந்தர்யா ஷர்மா|Soundarya Sharma shares Akshay Kumar’s ‘crucial advice’

சென்னை,
பல் மருத்துவராக இருந்து தற்போது நடிகையாக மாறி இருப்பவர் சவுந்தர்யா சர்மா. பிக் பாஸ் 16-ல் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பிறகு, தற்போது அவர் ”ஹவுஸ்புல் 5” என்ற நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார்.
இந்தப் படத்தில் ”லூசி” என்ற கேரக்டரில் நடிகை சவுந்தர்யா சர்மா நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில், சவுந்தர்யா ஷர்மா, அக்சய் குமார் தனக்கு வழங்கிய முக்கியமான அட்வைஸை பற்றி பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, “தொடர்ந்து உழைத்து கொண்டே இருங்கள். அது உங்களுக்கு பலனளிக்கும். பேசுபவராக இருப்பதை விட நன்றாக கேட்பவராக இருங்கள்” என்று அக்சய் குமார் கூறியதாக சவுந்தர்யா கூறினார்.