''அகண்டா 2'' – 'பஜ்ரங்கி பைஜான்' பிரபலத்திற்கு பாலய்யா படத்தில் பம்பர் ஆபர்

சென்னை,
”பஜ்ரங்கி பைஜான்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ஹர்ஷாலி மல்ஹோத்ரா, நந்தமுரி பாலகிருஷ்ணா(பாலையா) நடிக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ”அகண்டா 2” மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
தற்போது அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அவர் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
போயபதி ஸ்ரீனு இயக்கும் இந்த அதிரடி படத்தில் பாலகிருஷ்ணாவுடன் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அகண்டா 2 படம் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஹர்ஷாலியின் வருகை படத்திற்கு மேலும் அழகை சேர்த்திருக்கிறது.