ஆப்பிள் டிவி-யுடன் இணைந்த ‘பிரேக்கிங் பேட்’ எழுத்தாளர்..! | ‘Breaking Bad’ writer joins Apple TV..!

2008-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் பிரேக்கிங் பேட். இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதில் அன்னா கன், டீன் நோரிஸ், ஆர்ஜே மிட், பெட்சி பிராண்ட், ஜியான்கார்லோ எஸ்போசிட்டோ, ஜோனாதன் பேங்க்ஸ் மற்றும் பாப் ஓடென்கிர்க் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த தொடரை வின்ஸ் கில்லிகன் எழுதி இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், உலக புகழ் பெற ‘பிரேக்கிங் பேட்’ மற்றும் ‘பெட்டர் கால் சால்’ தொடர்களின் எழுத்தாளரான வின்ஸ் கில்லிகன் ஆப்பிள் டிவி-யுடன் இணைந்து ஒரு புதிய தொடரினை உருவாக்க உள்ளார். அதற்கான அறிவிப்பு வருகிற 25ம் தேதி வெளியாக உள்ளது. ‘பெட்டெர் கால் சால்’ தொடரில் கிம் வெக்ஸ்லர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரியா சீஹார்ன், இந்த புதிய தொடரின் நாயகியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.