மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர்

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர்

டிமான்டி காலனி 2

2024ஆம் ஆண்டு மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டிமான்டி காலனி 2. கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த டிமான்டி காலனி முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்ததை நாம் அறிவோம்.

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர் | Pre Production Work Started For Demonte Colony 3

அதன்பின் 9 ஆண்டுகள் கழித்து வெளிவந்த டிமான்டி காலனி 2 சிறந்த வரவேற்பை பெற்றது. இரண்டு படங்களையும் திரைக்கதையோடு இயக்குனர் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர் | Pre Production Work Started For Demonte Colony 3

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்த இப்படத்தின், மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தின் இறுதியில் கூட மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை வைத்திருந்தார் அஜய் ஞானமுத்து.

டிமான்டி காலனி 3

இந்த நிலையில், டிமான்டி காலனி 3 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை இயக்குனர் அஜய் ஞானமுத்து துவங்கி இருக்கிறாராம்.

மாபெரும் வெற்றியடைந்த டிமான்டி காலனி 2.. மூன்றாம் பாகத்திற்கான வேலையை ஆரம்பித்த இயக்குனர் | Pre Production Work Started For Demonte Colony 3

ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *