பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு, சம்பள விவரம் இதோ

விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
இதில் மகாராஜா திரைப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நடிப்பை தாண்டி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. ஆம், ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும், போட்டியாளர்களுடன் இவர் கலந்துரையாடும் விதம் மக்களை கவர்ந்துள்ளது.
விஜய் சேதுபதியின் பிறந்தநாள் – சொத்து மதிப்பு
இன்று நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு மட்டுமே சம்பளம் குறித்த விவரம் வெளிவந்துள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 140 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறுகின்றனர். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.