பல கோடி சம்பளம் பெறும் ரஜினி ஹீரோவாக நடிக்க முதன்முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பல கோடி சம்பளம் பெறும் ரஜினி ஹீரோவாக நடிக்க முதன்முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் என பெருமையாக கொண்டாடும் பிரபலம்.

கடைசியாக இவரது நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியாக ஓடவில்லை. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ. 260 கோடி முதல் ரூ. 280 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

பல கோடி சம்பளம் பெறும் ரஜினி ஹீரோவாக நடிக்க முதன்முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Rajinikanth First Salary As A Hero Details


முதல் சம்பளம்


இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக ஹீரோவாக நடிக்க வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா, இப்போது பார்ப்போம்.

1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானவர் மூன்று முடிச்சு, அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவ ராஜாராம், புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், காயத்ரி, ஆறு புஷ்பங்கள், சங்கர் சலீம், சைமன், ஆயிரம் ஜென்மங்கள், மாங்குடி மைனர் என தொடர்ந்து இரண்டாவது நாயகனாக நடித்தார்.

பின் ஹீரோவாக ரஜினி பைரவி என்ற படத்தில் நடித்தார், 1978ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடித்ததற்காக ரஜினி ரூ. 50 ஆயிரம் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.  

பல கோடி சம்பளம் பெறும் ரஜினி ஹீரோவாக நடிக்க முதன்முறையாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Rajinikanth First Salary As A Hero Details


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *