திருமண விஷயத்தில் திடீரென குண்டை தூக்கி போடும் ஆனந்தி.. கயல் அடுத்த வார ப்ரோமோ
சன் டிவியில் ‘கயல்’ சீரியலில் ஆனந்தியின் திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். ஆனந்தி ஆரம்பத்தில் வேண்டாம் என அழுதாலும், அதன் பின் ஓகே சொன்னதால் திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், சீர் செய்வதற்கான பணத்திற்கு என்ன செய்வது என கயல் வருத்தப்பட்டு இருந்தார். அதற்கு ஒரு தீர்வும் தற்போது கிடைத்து இருக்கிறது.
கயலின் அண்ணன் மூர்த்தி, தான் ஹோட்டல் தொழில் செய்து சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த பணத்தை கொண்டு வந்து கயலிடம் கொடுக்கிறார். மேலும் தம்பி போலீஸ் வேலை செய்யும் நிலையில் அவனும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கல்யாண செலவுக்கு வைத்துக்கொள் என கூறுகிறார்.
ஷாக் கொடுக்கும் ஆனந்தி
ஆனால் அதற்குப் பிறகுதான் ஒரு பெரிய பிரச்சனை வருவது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால்.. ஆனந்தி திருமணத்திற்கு விருப்பம் இல்லாதது போல எல்லோரிடமும் கடுப்புடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைக் கேட்டு கயலுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. உடனே அதை பற்றி பேசலாம் என ஆனந்தியிடம் நேராக சென்று, “உனக்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா இல்லையா சொல்” என நேரடியாகவே கேட்டு விடுகிறார்.
அவள் என்ன பதில் சொல்வாள்? ப்ரோமோவை பாருங்க.






