தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்… செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி


தாமரைச் செல்வி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மககளுக்கு பரீட்சயமானவர் தான் தாமரைச் செல்வி. அந்நிகழ்ச்சி முடிந்த கையோடு கணவருடன் விஜய் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.

பின் சீரியல்களில் நடித்து வந்தவருக்கு பட வாய்ப்புகளும் அதிகம் குவிந்து வருகிறது.

தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி | Thamarai Selvi Reply To Bayilvan Ranganathan

இந்த நிலையில் தாமரைச் செல்வி தன்னை ஆதி என்றவன் நல்லவன் போல் நடித்து நகைகளை ஏமாற்றிவிட்டான் என பரபரப்பு வீடியோ வெளியிட்டார். அவன் யார் என்றால் சின்ன மருமகள் சீரியல் புகழ் ஸ்வேதாவின் கணவர் தான், ஆனால் அவரோ அவனின் உண்மை முகம் தெரிந்து நான் பிரிந்துவிட்டேன்.

தற்போது விவாகரத்திற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளேன் என பதிவு செய்திருந்தார்.

வீடியோ

ஆதி ஏமாற்றிய விஷயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாமரைச்செல்வி போலீஸை நாடியுள்ளார், அந்த புகாரில் என்னென்ன நடக்கிறது எனவும் வீடியோ வெளியிட்டு வருகிறார். 

அந்த ஆதி என்ற நபரால் சீரியல் நடிகை வைஷ்ணவி, TTF வாசன் போன்ற பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். இந்த நிலையில் தாமரைச்செல்வி பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதனை கண்டபடி திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி | Thamarai Selvi Reply To Bayilvan Ranganathan

அதாவது பயில்வான் ஒரு யூடியூப் பேட்டியில், தாமரைச்செல்வி மற்றும் உதவி இயக்குனர் ஆதிக் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இது பிரச்சனை ஆனதும் நகை ஏமாற்றிவிட்டான் என புகார் கூறி வருகிறார் என்று கூறியுள்ளார்.

பயில்வான் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாமரைச் செல்வி அவரை கடுமையாக திட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ,




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *