சத்யராஜ் மகள் vs சிபிராஜ்! விஜய் கட்சியால் வீட்டுக்குள் பிரச்சனையா? அவரே சொன்ன பதில்


சத்யராஜ் மகன் சிபிராஜ் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தவெகவுக்கு ஆதரவாக சிபிராஜ் தொடர்ந்து பேசி வருகிறார்.

மறுபுறம் சத்யராஜின் மகள் திமுக கட்சியில் இணைந்து இருக்கிறார். அவர் தொடர்ந்து விஜய்யை தாக்கியும் பேசி வருகிறார்.

சமீபத்தில் திமுக வேட்பாளர்களை அறிவித்தபோது சத்யராஜ் மகளுக்கு சீட் கொடுக்கவில்லை, அதனால் அவரை நெட்டிசன்கள் விமர்சித்தனர். கட்சி தனக்கு வேறு பொறுப்பு கொடுக்கும் என திவ்யா சத்யராஜ் கூறினார்.

சத்யராஜ் மகள் vs சிபிராஜ்! விஜய் கட்சியால் வீட்டுக்குள் பிரச்சனையா? அவரே சொன்ன பதில் | Issues In Family Due To Tvk Sibiraj Sister Divya

வீட்டில் பிரச்சனையா?

அண்ணன் சிபிராஜ் விஜய்க்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வீட்டில் அவருடன் பிரச்சனையா என திவ்யாவிடம் செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த அவர் ‘இந்த உலகத்திலேயே இருவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒன்று சத்யராஜ் சார், மற்றொன்று சிபிராஜ் சார். அவர்கள் இரண்டு பேர் தான் என்னோட உலகம். அவங்க தான் எனக்கு எல்லாமே’.

‘சிபி சாருக்கு blue கலர் பிடிக்கும், அதற்காக எனக்கும் அதே கலர் தான் பிடிக்கணும் என அவசியம் கிடையாது.
நாங்க ரொம்ப progressive family. அதனால் அரசியல் காரணமாக வீட்டில் எந்த பிரச்னையும் இல்லை’ என திவ்யா கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *