ஒவ்வொரு வருடமும் காத்திருப்பேன்.. அஜித் பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

ஒவ்வொரு வருடமும் காத்திருப்பேன்.. அஜித் பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

அஜித் குட் பேட் அக்லீக்காக தற்போது டப்பிங் பேசி வருகிறாராம். இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ட்விட்டரில் மிகவும் நெகிழ்ச்சியாக அஜித் பற்றி பதிவிட்டு இருக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் காத்திருப்பேன்.. அஜித் பற்றி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் | Adhik Ravichandran About Ajith And Good Bad Ugly

ஒவ்வொரு வருடமும்..

“ஒவ்வொரு வருடமும், நான் அஜித் சார் குரலை தியேட்டரில் கேட்க காத்திருப்பேன். இப்போது கடவுள், பிரபஞ்சம் மற்றும் (அஜித்) சார் ஆகியோர் அனுமதித்ததால் நான் அவர் டப்பிங் செய்வதை நேரில் கேட்க முடிந்தது.”

“இந்த வருடம் தொடங்கியதும், முடிவதும் குட் பேட் அக்லீ என்று அழகிய பயணத்துடன் தான். இந்த நினைவகள் எப்போதும் என் மனதில் இருக்கும். உங்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் சார்.. லவ் யூ சார்” என ஆதிக் அஜித்துக்கு நன்றி கூறி இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *