அஜித்துடன் மோதும் தனுஷ்.. ஏப்ரலில் காத்திருக்கும் தரமான சம்பவம்

தனுஷ்
நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகம் காட்டி வருகிறார்.
பவர் பாண்டி, ராயன் போன்ற படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இயக்கியிருக்கும் படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இப்படத்தை தொடர்ந்து இட்லி கடை என்ற திரைப்படத்தையும் இயக்கியும் நடித்தும் வருகிறார்.
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அருண்விஜய், ராஜ்கிரண், நித்யா மேனன் என பலர் நடிக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
தனுஷ் vs அஜித்
இந்நிலையில், தனுஷின் இட்லி கடை படத்திற்கு போட்டியாக அஜித்தின் குட் பேட் அக்லி படமும் வெளிவர உள்ளது என கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆவது உறுதி என்பதை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் உறுதி செய்துள்ளார். இதனால், தனுஷின் இட்லி கடை மற்றும் அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு மத்தியில் போட்டி நிலவும் என கருதப்படுகிறது.