Iron Lung: திரை விமர்சனம் – சினிஉலகம்

Iron Lung: திரை விமர்சனம் – சினிஉலகம்

 அமெரிக்காவின் பிரபல யூடியூபர் மார்க் ஃபிஷ்பாக்கின் (Markiplier) இயக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் Iron Lung ஹாலிவுட் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா.


கதைக்களம்



தொலைதூர எதிர்காலத்தில் “Quiet Rapture” என்ற நிகழ்வு ஏற்பட்டதால் அனைத்து நட்சத்திரங்களும், கிரகங்களும் மர்மமான முறையில் மறைந்து போகின்றன.

அதேபோல் பெரும்பாலான மனித மக்கள்தொகையும் மறைந்துபோக, விண்வெளி நிலையங்கள் மற்றும் விண்கலங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.


இந்த சூழலில், சைமன் என்ற குற்றவாளி இரத்தக் கடலில் மூடப்பட்ட ஒரு நிலவை ஆராய “Iron Lung” என்று அழைக்கப்படும் சிதைந்த நீர்மூழ்கிக் கப்பலில் பயணிக்கிறார்.

அவர் அந்த பணியை சரியாக செய்து முடித்தால் விடுவிக்கப்படுவார் என்று அவரிடம் கூறப்படுகிறது.

Iron Lung: திரை விமர்சனம் | Iron Lung Movie Review



ஆனால், அந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏதோ ஒன்று விசித்திரமாக நடப்பதை சைமன் உணர்கிறார்.

அதன் பின்னர் அவர் என்ன கண்டுபிடித்தார்? நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து தப்பித்தாரா என்பதே மீதிக்கதை.



படம் பற்றிய அலசல்



வெளியே முழுக்க இரத்தம், அதையும் பார்க்க முடியாத சூழலில் சிக்கியிருக்கும் ஹீரோ, எப்படி ஒரு விஷயத்தை கண்டுபிடித்து வெளியேறினார் அல்லது அவருக்கு என்ன ஆனது என்பதை திகிலூட்டும் காட்சிகளுடன் மார்க் ஃபிஷ்பாக் இயக்கி, அவரே நடித்தும் உள்ளார்.



ஒரு சிதைந்த நீர்மூழ்கிக் கப்பலில் நடக்கும் iron lung என்ற கேம்-ஐ மையமாகக்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் மார்க்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் பின்னணி இசைதான். நம்மை பயமுறுத்தும் வகையில் காட்சி நகர்வுகளில் இசை அருமையாக கோர்க்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் பிலிப் ராய், இசையமைப்பாளர் ஆன்ட்ரூ ஹல்ஷுட் மிரட்டியிருக்கிறார்கள்.

கேமரா ஒர்க்கும் அதனுடன் சேர்த்துக்கொள்ள, ஒரு கட்டத்தில் நாமும் அந்த கப்பலில் பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்.

பாதி படத்திற்கு மேல் ஹீரோவுக்கு ஆக்ஸிஜன் தீர்ந்து மூச்சுத்திணறல் ஏற்படுவதை நாமும் உணர்ந்துவிடும்.

Iron Lung: திரை விமர்சனம் | Iron Lung Movie Review

அந்த அளவிற்கு நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளார் மார்க்.

ஒரு காட்சியில் மட்டுமே இரண்டு கதாபாத்திரங்கள் தோன்ற, படம் முழுவதும் மார்க்தான் தனியாக பெர்பார்மன்ஸ் செய்கிறார்.

என்னதான் மெனக்கெட்டு அவர் நடித்தாலும் படத்தின் நீளம் சற்று அயற்சியை கொடுக்கத்தான் செய்கிறது.

திரைக்கதையில் இன்னும் சில புத்திசாலித்தனமாக விஷயங்களை சேர்த்திருக்கலாம்.

இருந்தாலும் ஒன்றிரண்டு ட்விஸ்ட் ஒர்க் ஆகியுள்ளன.

யூடியூபராக இருந்து வந்து 3.6 மில்லியனில் படத்தை எடுத்தாலும், எங்குமே இது இன்டிபென்டட் படம் என்கிற உணர்வு தோன்றாத வகையில் தரமாக எடுத்துள்ளார் மார்க்.



க்ளாப்ஸ்



மார்க்கின் சோலோ நடிப்பு

இயக்கம்

பின்னணி இசை



பல்ப்ஸ்



ஒரே இடத்தில் கதை நகர்வதும், ஒரு சில வசனங்கள் திரும்ப திரும்ப வருவதும்


மொத்தத்தில் இந்த Iron Lung நல்ல எக்ஸ்பிரிமென்ட். வித்தியாசமான திரை அனுபவத்தை பெற நினைப்பவர்கள் பெரிய திரையில் பார்க்கலாம்.



ரேட்டிங்: 2.75/5

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *