Ghaati திரை விமர்சனம்

Ghaati திரை விமர்சனம்

அனுஷ்கா நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சோலோ ஹீரோயினாக இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் நடித்து இன்று வெளிவந்து காட்டி அவருக்கு கம்பேக் கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

அனுஷ்கா, விக்ரம் பிரபு காட்டி என்ற தொழில் செய்து வருகின்றனர். அதாவது அவர்கள் வாழும் காடுகளில் போதைப்பொருள் இலைகள் வளர்கிறது. அதை மூட்டை மூட்டையாக தூக்கி பெரியா வியாபாரிகளுக்கு கொடுக்கும் இல்லீகல் வேலை.

ஆனால், ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபு அப்பா இந்த வேலையில் இறக்க, அதனால் இனி காட்டி வேலையே வேண்டாம் என்று முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில் ஊருக்குள் ஒரு கும்பல் இந்த வேலையில் உச்சத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் திராவகமாக போதைப்பொருள் செய்கின்றனர்.

Ghaati movie review

இதை அறிந்து அந்த கும்பல் யார் என்று தேட பிறகு அது அனுஷ்கா, விக்ரம் பிரபு என தெரிய வருகிறது. இதனால் அவர்களை கொல்ல வர, அவர்களோ எல்லோரையும் அடித்து போட்டு பாட்னர் ஆகலாம் என பேசி டீல் முடிக்கின்றனர்.

அந்த பெரிய ஆட்கள் ஆரம்பத்தில் ஓகே சொல்லிவிட்டு, அனுஷ்கா, விக்ரம் பிரபு திருமணத்தின் போது வந்து ஊர் மக்களை அடித்து விக்ரம் பிரபுவை கொல்ல, அனுஷ்காவை உடையில்லாமல் அவமானப்படுத்த, பிறகு இவர்களை பழி வாங்க அனுஷ்கா ஆடும் ஆட்டமே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அனுஷ்கா ஒரு காலத்தில் அருந்ததி, ருத்ரமாதேவி என ஹீரோக்களுக்கு நிகராக மாஸ் காட்டி நடித்து வந்தவர், இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடை கூடியதால் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த அனுஷ்கா மீண்டும் பாகமதி, மிஸ்டர் மிஸ் பொலிஷிட்டி என கம்பேக் கொடுத்தார். தற்போது மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

விக்ரம் பிரபுவுடன் ஆரம்பத்தில் காதல், கலாட்டா என கலகலப்பாக தோன்றும் இவர் விக்ரம் பிரபு இழப்பிற்கு பிறகு ருத்ரதாண்டவம் ஆடுகிறார், ஒரு ஹீரோக்கு நிகராக அவர் நின்று சண்டைபோடும் காட்சிகள், வின்ச்பாக்ஸில் எல்லோரையும் அடித்து தனி ஆளாக நின்று வரும் காட்சி என தூள் கிளப்புகிறார்.

விக்ரம் பிரபுவும் தன் பங்கிற்கு சிறப்பாகவே நடித்து கொடுத்துள்ளார். ஆனால், படத்தில் மூலக்காரணமே போதைப்பொருள் , அதை கடத்தும் வேலைகளை அனுஷ்கா, விக்ரம் பிரபு பார்ப்பதாம் இவர்கள் இந்த வேலை செய்யும் நேரத்தில், ஆரம்பத்தில் எமோஷ்னல் காட்சிகள் எதுவும் ஒர்க் ஆகவில்லை.


இதுதான் அடுத்து நடக்கபோகிறது என்று காட்சிக்கு காட்சி நமக்கே தெரிவது கொஞ்சம் திரைக்கதையில் பலவீனம் ஆகிறது, படம் முழுவதும் போதைப்பொருள் பற்றி பேசிவிட்டு கிளைமேக்ஸில் திருந்துங்கள் என்பது பார்த்து பழகி போன சினிமாத்தனம்.

Ghaati Review

ஜகதிபாபு இவர் நல்லவரா, கெட்டவரா என்பது போல் அவரின் கதாபாத்திரம் வந்து செல்வது அவர் பங்கிற்கு ஸ்கோர் செய்கிறார், நாயுடு பிரதர்ஸ் வரும் 2 வில்லன்களில் இருவருமே டிபிக்கள் மாஸ் சினிமா வில்லன்களாகவே வந்து செல்கின்றனர்.

டெக்னிக்கல் விஷயத்தில் ஒளிப்பதிவு அந்த மலை பிரதேசத்தை காட்டிய விதம் அருமை, இசையும் ஒரு மாஸ் ஹீரோ படம் போல் கலக்கியுள்ளனர்.

க்ளாப்ஸ்

அனுஷ்கா, அனுஷ்கா, அனுஷ்கா ஒன் வுமன் ஷோ.

டெக்னிக்கல் விஷயங்கள்

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன திரைக்கதை, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று தெரியும் காட்சிகள்.

மொத்தத்தில் காட்டி அனுஷ்காவிற்கு மாஸ் ஏற்றிய நேரத்தில் திரைக்கதையில் புதுமை படுத்தியிருந்தால் கம்பேக் என்று சொல்லியிருக்கலாம்.

ரேட்டிங்: 2.5/5 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *