99 வயதில் மரணமடைந்த பழம்பெரும் நடிகை.. ரசிகர்கள் இரங்கல்

99 வயதில் மரணமடைந்த பழம்பெரும் நடிகை.. ரசிகர்கள் இரங்கல்

கொல்லங்குடி கருப்பாயி

ஆண்பாவம் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கொல்லங்குடி கருப்பாயி. இப்படத்தில், நடிகர் விகே ராமசாமிக்கு அம்மாவாகவும் நடிகர் பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்திருந்தார்.

அவர் நடித்த அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

99 வயதில் மரணமடைந்த பழம்பெரும் நடிகை.. ரசிகர்கள் இரங்கல் | Actress Kollangudi Karuppayi Died At 99

அதை தொடர்ந்து, கோபாலா கோபாலா, கபடி கபடி, ஆயிசு நூறு ஆண்களை நம்பாதே, போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமாகியுள்ளார்.

மரணம்

சினிமாவிலும் நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் நடிகையான கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99.

99 வயதில் மரணமடைந்த பழம்பெரும் நடிகை.. ரசிகர்கள் இரங்கல் | Actress Kollangudi Karuppayi Died At 99

தனது பாடல்களாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

இவருடைய மரண செய்தியை அறிந்த பலரும் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *