5 நாளில் ராம் சரணின் பெத்தி திரைப்படம் இத்தனை கோடி கலெக்ஷனா?…

5 நாளில் ராம் சரணின் பெத்தி திரைப்படம் இத்தனை கோடி கலெக்ஷனா?…

பெத்தி படம்

முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு படத்திற்கும் நடிகர்கள் கடுமையான உழைப்பு போடுகிறார்கள். 

அப்படி தான் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் ராம் சரண் ஒவ்வொரு படத்திற்கும் தனது உடலை வருத்தி நடிக்கிறார். சிரஞ்சீவியின் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் வந்தாலும் பெரிய இடத்தை பிடிப்பதற்கு ராம் சரண் கடினமாக உழைக்கிறார் என்று தான் கூற வேண்டும்.

அண்மையில் ராம் சரண் நடிப்பில் பெத்தி என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்காக தனது உடலமைப்பை மாற்றி மிகவும் கடின உழைப்பு போட்டு இப்படத்தில் நடித்துள்ளார். 

பாக்ஸ் ஆபிஸ்

கடந்த ஜுன் 4ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக வெளியானது. விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார். படத்தில் ஜான்வி கபூர் காட்சிகள் மட்டும் ஆபாசமாக உள்ளது என கமெண்ட் வர அதை இப்போது படக்குழு மாற்றியுள்ளார்கள்.

நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்யும் இப்படம் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 265 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *