24 மணிநேரம் கெடு, நீக்கா விட்டால்… எச்சரிக்கை விடுத்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பரபரப்பு பதிவு

24 மணிநேரம் கெடு, நீக்கா விட்டால்… எச்சரிக்கை விடுத்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பரபரப்பு பதிவு

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் வெளியான க்ரிக்கி பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கன்னட சினிமாவில் இருந்து அப்படியே தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் என்ட்ரி கொடுத்து வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்களின் மனதை வென்ற இவரை National Crush என ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

சமீபத்தில் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்தது போல் இவரும் விஜய் தேவரகொண்டாவும் நிஜ வாழ்க்கையில் இணைந்தனர், திருமணம் செய்துகொண்டனர்.

24 மணிநேரம் கெடு, நீக்கா விட்டால்... எச்சரிக்கை விடுத்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பரபரப்பு பதிவு | Rashmika Mandanna Warning Netizens For Audio

பரபரப்பு பதிவு

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அம்மா சுமார் 8 வருடங்களுக்கு முன்பு பேசிய ஒரு ஆடியோ இப்போது சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதில், ராஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் நிச்சயதார்த்தத்தின் போது ஏற்பட்ட சில சிக்கல்கள் குறித்து அவரது தாயார் பேசுவதாகக் கூறப்படுகிறது.

24 மணிநேரம் கெடு, நீக்கா விட்டால்... எச்சரிக்கை விடுத்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பரபரப்பு பதிவு | Rashmika Mandanna Warning Netizens For Audio

இதனை கண்ட ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில், அந்த ஆடியோவைப் பகிர்பவர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு நீக்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுவரை இந்த அற்புதமான பயணத்தில் என்னுடன் இருந்த எனது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் தனிநபர்களால் எனக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட தவறான பிரச்சாரங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

24 மணிநேரம் கெடு, நீக்கா விட்டால்... எச்சரிக்கை விடுத்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட பரபரப்பு பதிவு | Rashmika Mandanna Warning Netizens For Audio

எனது பேச்சுக்கள் சூழலுக்குப் புறம்பாக மாற்றப்படுவதையும், நான் சொல்லாத விஷயங்கள் தவறான கதைகளாகச் ஜோடிக்கப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

வெறும் வியூஸ்காகவும், ஈடுபாட்டிற்காகவும் (engagement) வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது.
பொது வாழ்க்கையில் வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த செயல்கள் அத்துமீறல்கள், இதை என்னால் புறக்கணிக்க முடியாது என பதிவு செய்துள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *