2010ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை

2010ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை

2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.


சிங்கம்


இயக்குநர் ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான தரமான மாஸ் கமர்ஷியல் திரைப்படம் சிங்கம். போலீஸ் கதைக்களத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. திரைக்கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, சண்டை காட்சிகள், பாடல்கள் என அனைத்துமே இப்படத்தில் சிறப்பாக அமைந்திருக்கும்.

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், நாசர், ராதாரவி, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சிங்கம் படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பார்ட் 2 மற்றும் பார்ட் 3 உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

2010ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2010 Best Tamil Movies

மைனா



தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த தரமான திரைப்படங்களில் ஒன்று மைனா. இன்று வரை ரசிகர்களின் மனதில் இப்படம் இடம்பிடித்துள்ளது. ஹீரோ விதார்த், ஹீரோயினை அமலா பாலை தாண்டி போலீஸ் அதிகாரிகளாக வரும் தம்பி ராமையா, நடிகர் சேது ஆகியோரையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தம்பி ராமையாவிற்கு சிறந்த துணை நடிகர் என தேசிய விருது கிடைத்தது. டி. இமான் இசையில் உருவான இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்துமே சூப்பர்ஹிட். பின்னணி இசையிலும் மிரட்டியிருப்பார்.

2010ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2010 Best Tamil Movies



ஆயிரத்தில் ஒருவன்


காலம்கடந்து பேசப்படும் திரைப்படங்களில் ஒன்று ஆயிரத்தில் ஒருவன். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான இப்படம் வெளிவந்த சமயத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாட தவறினார்கள். ஆனால், தற்போது தமிழ் சினிமாவின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று இப்படம் என தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

செல்வராகவன் என சொன்னவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படமாகவும் ஆயிரத்தில் ஒருவன் மாறியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, அழகம் பெருமாள், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

2010ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2010 Best Tamil Movies



மதராசபட்டினம்


காதல் காவிய திரைப்படங்களில் மக்களின் மனதில் இடம்பிடித்த படம் மதராசபட்டினம். இயக்குநர் ஏ.எல். விஜய்யின் இயக்கத்தில் உருவான திரைப்படங்களிலேயே தரமான படம் மதராசபட்டினம் என்று சொல்லலாம். சுந்தரத்திற்கு முன் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடைக்கும் இந்திய மண்ணை சேர்ந்த பரிதி என்பவனுக்கும், ஆங்கிலேயே பெண்ணான எமி வில்கின்ஸனுக்கும் இடையே மலரும் காதலை இப்படத்தில் அழகாக காட்டியிருப்பார் இயக்குநர் விஜய்.

மேலும் கிளைமாக்ஸ் காட்சிதான் இன்றும் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. ஆர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, எமி ஜாக்சன் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு பாடலும் மனதை வருடியது. அதே போல் பின்னணி இசை வேற லெவலில் இருக்கும்.

2010ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2010 Best Tamil Movies

ஆரண்ய காண்டம்


தமிழ் சினிமாவில் குறைத்து மதிப்பிடப்பட்ட இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இதுவரை இரண்டு திரைப்படங்கள் இயக்கியிருந்தாலும், இரண்டுமே தரமான படங்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இவருடைய அறிமுக இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் ஆரண்ய காண்டம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தை போலவே இப்படமும் வெளிவந்த சமயத்தில் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், தற்போது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தில் யாஸ்மின் பொன்னப்பா, ரவி கிருஷ்ணா, ஜாக்கி ஷரோப், சம்பத். குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2010ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள்.. சிறப்பு பார்வை | 2010 Best Tamil Movies

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *