2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் டாப் 10 படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க.

பெரியார்

ஞான ராஜசேகரன் இயக்கத்தில் தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான படம் பெரியார். இப்படத்தில் பெரியாராக சத்யராஜ் நடித்திருந்தார். மேலும், குஷ்பூ, ஜோதிமயி, நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

பருத்திவீரன்

இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் கார்த்தியின் அறிமுக படமான பருத்திவீரன், 2007ஆம் ஆண்டின் தலைசிறந்த படங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. இது கார்த்தியின் அறிமுக படமாகும். இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ப்ரியாமணி, பொன்வண்ணன், சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

கற்றது தமிழ்

இயக்குனர் ராம் இயக்கத்தில் எதார்த்தமான கதைக்களத்தில் உருவான படம் கற்றது தமிழ். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, இப்படத்தில் ஜீவா, அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர். 

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

மொழி

எப்போதும் எதார்த்தமான, உணர்வுபூர்வமான கதைக்களத்தை கொண்டு ரசிகர்களின் மனதை தொடுப்பவர் இயக்குனர் ராதா மோகன். இவர் இயக்கத்தில் 2007ல் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் மொழி. இப்படத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ் ராஜ், ஸ்வர்ணமால்யா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

சிவாஜி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த படம் சிவாஜி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரியா, வடிவுக்கரசி, விவேக், மணிவண்ணன், சுமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

போக்கிரி

தளபதி விஜய்யின் திரைவாழ்க்கையிலும் சரி, 2007ஆம் ஆண்டின் சிறந்த படங்களிலும் சரி இந்த படம் கண்டிப்பாக இடம்பெறும். தெலுங்கிலும் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்ட படமாக போக்கிரி இருந்தாலும், பிரபு தேவாவின் இயக்கம், விஜய்யின் நடிப்பு, நமக்கு புதிய மாஸ் ஆக்ஷன் அனுபவத்தை இப்படம் கொடுத்தது. மணி ஷர்மா இசையில் உருவான இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்கள் சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

பில்லா

ரஜினியின் பில்லா படத்தை மீண்டும் ரீமேக் செய்து எடுக்கப்பட்ட படம் அஜித்தின் பில்லா. 2007ல் மாஸ் கேங்ஸ்டர் படமாக வெளியான பில்லா, இதற்கு முன் வெளிவந்த ரஜினியின் பில்லா படத்தையே மறக்க வைக்கும் அளவிற்கு இருந்தது. விஷ்ணு வர்தன் இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, நமிதா, ரஹ்மான், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தார். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

பொல்லாதவன்

இன்று தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் முக்கிய இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன், அறிமுகமான திரைப்படம் பொல்லாதவன். தனுஷ் ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவருடன் இணைந்து ரம்யா, கிஷோர், டேனியல் பாலாஜி, சந்தானம், பானுப்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

வேல்

ஹரி – சூர்யா கூட்டணி என்றால் உடனடியாக அனைவருக்கும் நினைவுக்கு வரும் திரைப்படம் வேல் தான். கிராமத்து கதைக்களத்தில், இரட்டை கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டி இருந்த இப்படம், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. யுவன் இசையில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து கலாபவன் மணி அசின், வடிவேலு, ராஜ்கபூர், லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், சரண்ராஜ் ஆகியோர் நடித்திருந்தார்.

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

சென்னை 28

விஜய், அஜித், சூர்யா என முன்னணி நட்சத்திரங்களை வைத்து இயக்கி, இன்று முன்னணி இயக்குனராக இருக்கும் வெங்கட் பிரபுவின் அறிமுக படம் சென்னை 28. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளைஞர்களின் மனதை கவர்ந்த சென்னை 28 படத்தில், மிர்ச்சி சிவா, விஜய், ஜெய், நிதின் சத்யா, விஜயலக்ஷ்மி, பிரேம்ஜி என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். 

2007ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2007 Best Tamil Movies

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *