ஹீரோயினாக கலக்கும் அதிதி! ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்..

ஹீரோயினாக கலக்கும் அதிதி! ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்..

அதிதி ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ‘விருமன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படமே ஹிட்டான நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து மாவீரன் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஹீரோயினாக கலக்கும் அதிதி! ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்.. | Director Shankar Son To Debut As A Hero

ஹீரோவாகும் ஷங்கரின் மகன்

ஷங்கர் வீட்டில் இருந்து சினிமாவிற்கு ஹீரோயின் கிடைத்த நிலையில் தற்போது ஹீரோவும் வரவுள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

ஹீரோயினாக கலக்கும் அதிதி! ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்.. | Director Shankar Son To Debut As A Hero

இந்த நிலையில், விரைவில் இவர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளாராம். அதுவும் பிரபு தேவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிதியை தொடர்ந்து அர்ஜித் ஷங்கருக்கும் தமிழ் சினிமாவிற்கு நல்லவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மூத்த சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *